
ஐயாத்துரை சாந்தன் ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். மொழிபெயர்ப்பிலும் உலக எழுத்தாளர்களைத் தமிழில் அறிமுகம் செய்வதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 27 நூல்களை எழுதியிருக்கிறார்.
இவரது முதலாவது சிறுகதை 1966 ஆம் ஆண்டு புரட்டாதி கலைச்செல்வி இதழில் வெளியானது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது இவரது "பார்வைகள்" என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியானது. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பல சிறுகதைகளின் ஆசிரியர். சிறிய சிறுகதைகள், குறுங்கதைகள் என்ற வடிவங்களை வெற்றிகரமாக கையாண்டவர். இனப்பிரச்சனை, போர்க்கால வாழ்வு போன்றவற்றை இரு மொழிகளிலும் கலைப்படைப்புக்களாக்கினார்.
விருதுகள்
இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - ஒரே ஒரு ஊரிலே - 1975
முதல் பரிசு - இலங்கை-சோவியத் நட்புறவுக் கழக வெள்ளி விழாக் கட்டுரைப் போட்டி - 1982
State literary Award - In Their Own Worlds - 2000
Gratiaen (Short Listed) - The Whirlwind - 2010
Gratiaen (Short Listed) - Rails Run Parallel - 2014
Fairway Best Novel Award - Rails Run Parallel - 2015
Godage Best Novel Award - Rails Run Parallel - 2015
சாகித்திய ஸ்ரீ விருது - India Intercontinental Cultural Association - 2016
வாழ்நாள் சாதனையாளர் விருது (கொடகே தேசிய சாகித்திய விருது, 2017)
Premchand Fellowship - 2017
Popular Books by ஐ. சாந்தன்

