கோகுல் சேஷாத்ரி

  1. home
  2. Author
  3. கோகுல் சேஷாத்ரி
கோகுல் சேஷாத்ரி

13 Published Booksகோகுல் சேஷாத்ரி

Dr. Gokul Seshadri is the author of several works of historic fiction in Tamil based on the medieval history of South India. He is also a researcher, specializing in South Indian temple art and architecture.

A software architect by profession, Gokul started exploring his creative writing skills 20 years ago - with his first novel Rajakesari. This was followed by many other novels, short stories and articles. From 2010 onwards, he started pursuing academic studies in History with M.A. and M.Phil. degrees, followed by a doctoral research on Chola Ramayana sculptures. His novels are replete with intricate epigraphic, cultural, and historic references drawn from inscriptions, copper plate grants, literatures and living oral traditions. All of his books have been published by Palaniappa brothers. Also, from 2019 onwards, StoryTel India has been publishing his well known works as audiobooks.

முனைவர் கோகுல் சேஷாத்ரி தமிழில் பல வரலாற்றுப் புதினங்களை படைத்துள்ள எழுத்தாளர். கட்டுரையாளர். மற்றும் வரலாற்றாய்வாளர்.

மென்பொருள் துறையில் பணியாற்றும் இவர் வரலாற்றின் மேல் காதல் கொண்டு 2003ல் எழுதத் துவங்கினார். 2004ல் இணையத்தில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற இராஜகேசரி, தமிழ் இணைய உலகில் நேரடியாக வெளிவந்த முதல் வரலாற்றுப் புதினமாகும். தொடர்ந்து பைசாசம், சேர ர் கோட்டை, திருமாளிகை, உதயபானு உள்ளிட்ட பல நாவல்களைப் படைத்துள்ளார். 2010 முதல் தீவிரமான வரலாற்றாய்வில் ஈடுபட்டு சோழர் கால இராமாயணச் சிற்பங்கள் பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது வரலாற்றாய்வின் தாக்கத்தை இவரது படைப்புக்களெங்கும் நுண்ணிய கல்வெட்டுச் செய்திகளாகவும் இலக்கியத் தரவுகளாகவும் விரவிக் கிடப்பதைக் காணலாம்.

2008 முதல் பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனம் இவரது புத்தகங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் 2019 முதல் ஸ்டோரிடெல் நிறுவனம் இவரது படைப்புக்களை ஒலிப்புத்தகங்களாகவும் வெளியிட்டு வருகிறது.